சினிமா திரைப்பயணத்தில் விக்ரமை தூக்கிவிட்ட சிறந்த 10 திரைப்படங்கள்.!

ராசியில்லாத நடிகர் என தமிழ் திரையுலகில் வலம் வந்த நடிகர் தான் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை விக்ரம் தான் இவர் ஆரம்ப கால கட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு வெற்றியைத் தராமல் தோல்வியை தந்து கொண்டிருந்தது ஆனால் சேது திரைப்படத்தில் நடித்து அதையெல்லாம் ஒரேடியாக விக்ரம் சரி கட்டி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் விக்ரம் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் எந்த திரைப்படமும் அவருக்கு கை கொடுக்காததால் ஒரு கட்டத்தில் இவரை ராசியில்லாத நடிகர் என கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள் அதையெல்லாம் சரி கட்ட வேண்டும் என்பதற்காக தனது விடா முயற்சியினால் ஒவ்வொரு திரைப்படங்களும் பார்த்து பார்த்து நடித்து வந்த விக்ரம் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் இவர் ஒரு இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது உடலை மிகவும் பார்த்து பார்த்து தன்னைத்தானே வருத்திக்கொண்டு நடித்து வந்தார் இந்நிலையில் இவர் நடித்த பத்து சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது அதை பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம்.

vikram2
vikram2

அதில் சேது, தெய்வத்திருமகள்,அந்நியன், ஐ, காசி, பிதாமகன்,சாமி,தில், இரு முகன், ஜெமினி போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படங்கள் மூலம் தான் இவர் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vikram3
vikram3

இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவர் நடித்துவரும் கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 போன்ற பல திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment