டாப் 10க்குள் அஜித்.! இணையதளத்தை தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.

0
thala-ajtih-shooting
thala-ajtih-shooting

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் உயரத்தை அடைந்தவர் தல அஜித், தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இந்த வருடத்தில் மட்டும் அஜித் இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தல அஜித் சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், பிரியாணி சமைப்பது, போட்டோகிராபி, ஆளில்லா விமானத்தை இயக்குவது, துப்பாக்கி சுடுதல் எனப் பல திறமைகளைக் கொண்டவர், சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டி எங்கு நடைபெற்றாலும் கலந்து கொண்டு வருகிறார் அஜித். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் குறிப்பிட்ட புள்ளியை பெற்று அதன் பின் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட அஜித் டாப் 10க்குள் 9வது இடத்தைப் பிடித்துள்ளார், அதனால் ரசிகர்கள் இந்த செய்தியை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள், அஜித் சினிமாவை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்,.

இப்படி சினிமாவை தாண்டி பல திறமைகளை வைத்துள்ள அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

thala-ajtih-shooting
thala-ajtih-shooting