தமிழை தாண்டி வெளிநாடுகளில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 10 நடிகர்கள்.! இதோ லிஸ்ட்.

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படங்கள் வெளி நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதிலும் ரஜினி நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் முதல் பீஸ்ட் வரை எந்தெந்த திரைப்படங்கள் வெளிநாட்டில் அதிக வசூல் செய்துள்ளது என்பது பற்றி தற்போது நாம் பார்த்திருக்கிறோம்.

2. O;- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் எமி ஜாக்சன் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 2.O. இந்த திரைப்படம் தமிழகத்தில்  நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

2.O
2.O

கபாலி;- இளம் இயக்குனரான பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்தே, அட்டகத்தி தினேஷ், ஜான் விஜய், தன்ஷிகா, நாசர்,என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் கபாலி. இந்த திரைப்படமும் வெளிநாட்டில் ஒரு மிகப்பெரிய வசூல் செய்துள்ளது.

எந்திரன்;- இயக்குனர் சங்கர் மற்றும்  ரஜினிகாந்த் கூட்டணியில் மிகப் பிரமாண்டமாக உருவாகி நல்ல வெற்றி கண்ட திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படமும் வெளிநாட்டில் ஒரு நல்ல வசூல் சாதனை செய்து தந்தது.

enthiran
enthiran

பிகில்;- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கதிர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் நடிக்கும் அதிரடி மற்றும் விளையாட்டு திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்தத் திரைப்படம் தமிழகத்தில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது மேலும் வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது.

தர்பார்;- முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் குடும்ப பாங்கான அதிரடி திரைப்படம் தர்பார். அத்திரைப்படம் தமிழகத்தில் ஓரளவு வெற்றி கண்டிருந்தாலும் வெளிநாட்டில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து உள்ளது.

dharbar
dharbar

மெர்சல்;- இயக்குனர் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படமும் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்து தந்தது.

பேட்ட;- ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சர்கார்;- விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை ஏ,ஆர். முருகதாஸ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

sarkar
sarkar

ஐ;- சியான் விக்ரம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் காதல்,ஆக்ஷன், திரில்லர் போன்ற உணர்ச்சிகரமான திரைப்படம் ஐ. இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது அதேபோல வெளிநாடுகளிலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட்;- இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Beast
Beast

Leave a Comment