ஒரே நாளில் அடுத்தடுத்த அப்டேட்டை கொடுக்கும் அஜித் – விஜய்.! நாளைக்கு கதற போகும் இணையதளம்.!

vijay ajith
vijay ajith

தமிழ் சினிமாவை சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் ஆகியவர்களை தொடர்ந்து அஜித் விஜய் இருவரும் இரு தூண்களாக நின்று காப்பாற்றி கொண்டு வருகின்றனர் இருவருமே அதிகப்படியான ரசிகர்களை வைத்து கொண்டு சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்கள் மற்றும் மக்களை  திரையரங்கு இழுத்து வருகின்றனர். அப்படி அண்மையில் கூட விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி அசத்திய நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட திரைப்படமும் ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

அது போல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படம் இப்பொழுதும் சிறப்பாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் விஜய் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகின்றனர் அந்த வகையில் அஜித் இது 61 மற்றும் 62 ஆகிய இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் முதலாவதாக மீண்டும் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து  62வது திரைப்படத்திற்கான இயக்குனரையும் செலக்ட் செய்து உள்ளதாக கூறப்படுகிறது அப்படி சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி பார்வையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62 நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாளை அப்டேட் வெளியாக இருக்கிறது. இதேபோல ரசிகர்கள் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை எதிர்நோக்கி மிகப்பெரிய அளவில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அப்படி ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்லும் வகையில் நாளை பீஸ்ட் படத்தின்  மோஷன் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்படி ஒரே நாளில் அஜித் விஜய் ஆகிய இருவரின் அப்டேட்டுகள் வெளிவர உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.