அண்ணன் படத்த பாத்துட்டு தம்பி படத்தை பாருங்க.. அப்ப ஜனநாயகன் ரிலீசானதும் பராசக்தி பாப்போம், நெட்டிசன்கள் அலப்பறை

ஜனநாயகன் படம் தள்ளிப் போனாலும் போனது சோசியல் மீடியா முழுவதும் ஒரே அலப்பரையாக இருக்கிறது. அதில் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை வெளுத்து வாங்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படங்களின் மோதல் இரு தரப்பு ரசிகர்களையும் சண்டை போட வைத்திருக்கிறது. அதில் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எரியிற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறிவிட்டது.

இது அண்ணன் தம்பி பொங்கல் அண்ணன் படத்தை பார்த்துட்டு தம்பி படத்தை பாருங்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். ஆனால் அதை கூட இப்போது நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.

நீங்கதானே அண்ணன் படத்த பாத்துட்டு தம்பி படத்தை பார்க்க சொன்னீங்க. அப்ப ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கப்புறம் பராசக்தியை பாக்குறோம் வரட்டா என கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.