நியூ இயர் அதுவுமாக பிறந்த நாள் காணும் சினிமா பிரபலங்கள்.! ஆத்தாடி இத்தனை பேர் ஜனவரி 1ல் பிறந்தவர்களா..

New year Birthday celebrity : இன்று 2024 ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு இதனை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மக்களும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் சினிமா பிரபலங்களும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பார்ட்டி பப் என அமர்க்களப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள்  பிறந்தநாள் அதுவுமாக பிறந்துள்ளார்கள் அவர்களின் லிஸ்ட்டை  இங்கே காணலாம்.

பொதுவாக ஜனவரி 1ல் பிறந்தவர்கள் இரட்டை விதமான கொண்டாட்டம் தான் ஒன்று பிறந்தநாள் இன்னொன்று ஆங்கில புத்தாண்டு இதனை விமர்சையாக கொண்டாடுவார்கள் அந்த லிஸ்டில் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்த சினிமா பிரபலங்களை இங்கே காணலாம்.

வித்யா பாலன்

1978 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர் வித்யா பாலன் இவர் பாலிவுட் நடிகை. தமிழில் அஜித் உடன் நடித்திருந்தார்.. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

கலாபவன் மணி

1971 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர் கலாபவன் மணி இவர் தென்னிந்திய சினிமாவில் நடிகர், பாடகர் என பல திறமையை வெளிப்படுத்தியவர் மேலும் இவர் நடிக்கும் காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியவர் இவர் தேசிய விருதையும் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றவர். ஆனால் தற்பொழுது இவர் உயிருடன் இல்லை இவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி மரணம் அடைந்தார்.

நானா பாடேகர்

ஜனவரி 1 1951 ஆம் ஆண்டு பிறந்தவர் இவரும் இந்திய சினிமா நடிகர் ஆவார் மேலும் இவர் 1990 ஆம் ஆண்டு இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பாலாஜி சக்திவேல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல் இவர் சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இவர் ஜனவரி 1ஆம் தேதியான 1964 ஆம் ஆண்டு தான் பிறந்தார்.

ரவி பஸ்ரூர்

1984 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர் பஸ் ரூர் இவர் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தவர் பல கன்னடம் மற்றும் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

1982 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினி மேலும் இவர் இயக்குனர் நடனமாடுபவர் பின்னணி பாடகி என பல துறைகளில் பணியாற்றியுள்ளார் இவரும் புத்தாண்டு அன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவர்களைத் தொடர்ந்து என் ஆனந்த், ஐஸ்வர்யா தாத்தா,  ரம்யா நம்பீசன் ஆகியோர்கள் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்தவர்கள் ஆவார்..