இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் விவரம்.!

0
india
india

உலக கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன, இது 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது, மேலும் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கி விட்டதால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி யும் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதிக் கொள்கின்றன, இன்று நடைபெறும் 34 வது லீக் ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியன் பெற்ற இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி நான்கு வெற்றிகளுடன் 9 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது இன்று வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உறுதியாகிவிடும், அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டியது, அதன் பிறகு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கவலைக்கிடம் தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அரையிறுதிக்குள் நுழைவதற்கு நூலிழையை தான் வாய்ப்புகள் இருக்கிறது, இனிவரும் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு, ஏனென்றால் இதுவரை நடந்த 6 போட்டிகளில் மூன்று புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த நிலையில் இன்றைய போட்டிகளில் விளையாடும் அணிகளின் வீரர்களின் விவரங்கள் இதோ.

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், இவின் லீவிஸ் அல்லது சுனில் அம்ப்ரிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், காட்ரெல், ஒஷானே தாமஸ்.