இன்றைய உலக கோப்பை போட்டியில் இவரும் உண்டா.! என்னப்பா இப்படி ட்விஸ்ட் மேல டிவிஸ்டா வைக்கிறார்கள்

0
bangladeshvsindia
bangladeshvsindia

உலக கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகிறார்கள், இந்த நிலையில் இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற இருக்கிறது, வங்கதேச அணி இந்த முறை மிகவும் வலுவான அணியாக இருக்கிறது அதனால் இன்று  நடைபெறும் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்க்கு முன்  நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ் குமார் பவுலிங்  போடும் பொது  5-வது ஓவரில் படுகாயம் அடைந்தார், அவர் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் பொழுது வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார் அதனால் 4 பந்துகள் போட்டவர் பாதியிலேயே பெவிலியன் சென்றார், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள் அதனால் அவருக்கு பதில் கடைசி மூன்று போட்டிகளில் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார்.

ஷமி கடைசியாக விளையாண்ட 3 போட்டிகளிலும் இதுவரை 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், இவருக்கு தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது இந்த நிலையில் அணியில் புதிய திருப்பமாக புவனேஷ் குமார் தனது உடல் தகுதியை மீண்டும் நிரூபித்து அணியில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவரை சோதித்து விட்டு இனி  விளையாடலாம் என அனுமதி கொடுத்துவிட்டார்கள், அதேபோல் இந்திய அணியின் தேர்வு வாரியமும் இவர் விளையாடுவதற்கு அனுமதி அளித்துவிட்டது, அதனால் இந்திய அணி மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறது, ஏனென்றால் புவனேஸ்வர் அணிக்கு  திரும்பியதால் பவுலிங்கில் இந்திய அணி மேலும் பலம் பெற்றுவிடும்.

மேலும் இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி விஜய் சங்கர் காயம் காரணமாக நீக்கப்பட்டார், அவருக்கு பதில் வலுவான மயங்க அகர்வால் அணியில்  இருக்கிறார் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா அணியில் எடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது . இப்படி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப செய்தி  வந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.