ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்த ஆச்சி மனோரமாவின் நினைவு நாள் இன்று..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் துணை நடிகையாகவும் வலம் வந்தது மட்டுமில்லாமல் ஒரு நேரத்தில்  தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர்தான் நடிகை மனோரமா. இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் இயற்பெயர் கோபிசாந்தா இவருடைய நாடக நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் திருவேங்கடம் அவர்கள் இவருக்கு மனோரமா என பெயர் சூட்டி உள்ளார்.  அந்த வகையில் இவர் தென்பாண்டி வீரன், புதுவெள்ளம், மணிமகுடம் போன்ற நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெருமளவு கவனிக்கப்பட்டார் அதன் பிறகு இவருடைய நடிப்பு மற்றும் அழகை பார்த்து அசந்துபோன பலர் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நடிகை மட்டும் கிடையாது சிறந்த பாடகியும் கூட அந்த வகையில் பல்வேறு பாடல்களை இவர் தமிழ் சினிமாவில் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களான பாட்டி சொல்லை தட்டாதே, மகளே உன் சமத்து, வா வாத்தியாரே வூட்டாண்ட  புதிய பாடல்கள் மெகா ஹிட் அடித்துள்ளது.

இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் குரல் மூலமாக பல்வேறு தேசிய விருதுகளை மனோரமா அவர்கள் பெற்றுள்ளார். அந்தவகையில் அரசின் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற மனோரமா ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

manoramma-1
manoramma-1

இவ்வாறு பிரபலமான நமது நடிகை எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு மிகச் சிறப்பாக நடித்துக் கொடுப்பதில் வல்லவர் இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நமது மனோரமா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் இவரின் ஆறாவது நினைவு தினம் இன்று ஆகையால் ரசிகர்கள் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Leave a Comment