இன்று நடிகர் கார்த்திக்கு பிறந்த நாள் : ரசிகர்கள் எனக்கு இந்த பரிசை கொடுத்தால் நான் மனம்மார ஏற்று கொள்கிறேன்.!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது அப்பா, அண்ணன் போல சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பை வெளிப்படுத்துவதால் வெகுவிரைவிலேயே மிகப்பெரிய இடத்தை தொட்டுள்ளார் கார்த்தி.

மேலும் இவரது சமீப கால திரைப்படங்களில் ஒவ்வென்றும் அதிரிபுதிரி ஹிட் அடிப்பது மற்றும் இவரது நடிப்பும் வேற லெவலில் இருந்து வருகிறது. தற்பொழுது பல்வேறு திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதில் ஒன்று பொன்னின் செல்வன் திரைப்படம் இது கார்த்திக்கு மிகப்பெரிய ஒரு எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சக நடிகைகள் மற்றும் தொழில் சார்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைசமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி எனக்காக ரசிகர்கள் இதை ஒன்றை செய்தால் போதும் நான் அதை அன்பு பரிசாக ஏற்றுக் கொள்வேன் என கூறி உள்ளார்.

karthi
karthi

ரசிகர்களுக்கு அவர் கூறியது : அண்ணன், தம்பி அனைவருக்கும் வணக்கம் இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிக கடுமையாக உள்ளது அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர் அதை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே ஓரளவு இந்த கொரோனா தோற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என கூறினார்.

மேலும் மாஸ்க் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்க முடியும். எனது தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள்  குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே நீங்கள் என் பிறந்தநாளுக்கு தரும் அன்பு பரிசாக ஏற்று கொள்கிறேன் என கூறினார். இச்செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Leave a Comment