இன்று முழுவதும் வெளுத்து வாங்க போகும் மழை.! சென்னை மக்களே உஷார்

0
rain
rain

தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது இதிலும் குறிப்பாக சென்னையிலும் மழை பெய்து வருகிறது, வெப்பச்சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது தமிழ்நாட்டில் அதேபோல் தென்மேற்கு பருவக்காற்று மழை மலைப்பிரதேசங்களில் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் பருவமழை காரணமாக சாரல் மழை அல்லது கனமழை பெய்து வருகிறது, அதுவும் தென் சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் கடலோர பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது, தற்பொழுது மிகவும் சென்னை குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று முழுவதும் மழை பெய்யும் என கூறியுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் இன்று இரவும் நாளை காலை பலத்த மழை இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.

இன்று காலை மழை அதிகம் பெய்ததால் மக்கள் அலுவலகங்களுக்கும், வெளியே செல்ல முடியாமலும் தவித்தார்கள் மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.