இன்று இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினால் அதன் மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும் தெரியுமா.?

இந்த ஆண்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது திருமணம் சீசன் தொடங்கியதால் நகையை வாங்க நடத்துற மக்கள் திணறி வருகிறார்கள்.

2 லட்சத்திற்கு தங்கத்தை வாங்கினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா. முதலீட்டாளர்கள் தங்கத்தில் இன்வெஸ்ட் செய்வதால் சுமார் ஐந்து ஆண்டுகளை பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை சுமார் ஒன்றரை லட்சத்தை எட்டி உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12890 ரூபாய் ஒரு சவரனுக்கு 560 உயர்ந்து ஒரு லட்சத்து 3120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக அளவில் உள்நாட்டு சூழல் முதலீட்டாளர்களை தங்கம் பக்கம் ஈர்த்துள்ளது இதில் பெரிய கேள்வி என்னவென்றால் இன்று நாம் முதலீடு செய்தால் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் மூலம் எவ்வளவு லாபத்தை அடையலாம் என்பதுதான்.

கடந்த 25 ஆண்டுகளில் 2013 2015 மற்றும் 2021 மட்டுமே எதிர்மறையான தங்கத்தின் விலைகள் இருக்கின்றன. 2000 ஆண்டில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 4400 ஆக இருந்தது இப்பொழுது ஒரு லட்சத்து 25 ஆயிரம் எட்டியுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 25 முதல் 35 சதவீதம் உயர்ந்து வருகிறது. இதனால் தங்கமூலம் நல்ல வருமானம் வரும் கிடைக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினால் அதன்மூலம் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்சம் தொடும் என பல்வேறு அறிக்கைகள் கூறுகிறார்கள்.