ரேக்காவின் செயலால் தலையில் அடித்துகொள்ளும் சனம் ஷெட்டி.! மல்லுக்கட்டும் ரம்யா பாண்டியன் ரேகா.! இதோ ப்ரொமோ வீடியோ

0

பிக்பாஸ் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு கடந்த சில நாட்களாகவே சண்டைக்காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகளும் நடைபெற்று வருகின்றன, அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம்போல் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் இந்த முறை விஜய் தொலைக்காட்சி தனது டிஆர்பி ஏற்றுவதற்காக போட்டியாளர்களை செலக்ட் செய்து சேர்த்துள்ளார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வாழ்வில் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறினார்.

அது மட்டுமில்லாமல் தனது வாழ்க்கையில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு பல டிவி சேனல்களில் வேலை பார்த்து உள்ளதாகவும் தனது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார் அனிதா சம்பத். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பூதாகரமாக ஒரு விஷயம் வெடித்துள்ளது.

அதில் நடிகை ரேகா சனம் ஷெட்டிக்கு ஏதோ ஹெல்ப் செய்துள்ளார், ஆனால் சனம் ஷெட்டி செய்ய வேண்டாம் உங்களை யார் செய்ய சொன்னது என சண்டை போடுகிறார் அதேபோல் ரம்ய பண்டியன் ரேகாவிடம் வாக்குவாதம் செய்கிறார்,  மேலும் சனம் ஷெட்டி தலையில் அடித்து கொள்கிறார் இன்றைய நிகழ்ச்சியும் மிகவும் பரபரப்பாக சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.