13 விக்கெட் எடுத்து என்ன பயன் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.! கவலையில் பிரபல வீரர்

0
ind-vs-Bangladesh
ind-vs-Bangladesh

இன்றைய உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணியும்  இந்திய அணியும் மோதவிருக்கின்றன வங்கதேச அணி தற்போது மிகவும் வலுவான அணியாக இருக்கிறது, இந்திய அணி பற்றி சொல்லவே தேவையில்லை இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் மோதுவதால் இன்றைய மேட்ச் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்துள்ளார்கள், சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் போட்டியில் புவனேஸ்வர் காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார், அதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள், தற்பொழுது உடல் தகுதி தேறி மீண்டும் விளையாட இருக்கிறார்.

இவர் மீண்டும் அணியில் சேர்வதால் ஷமிக்கு சோதனை காலம் தான், புவனேஸ்வர் காயம் காரணமாக மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்தார் அவருக்கு பதில் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார் இவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இதுவரை 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 4 விக்கெட்களையும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.

ஷமி அதிக விக்கெட் எடுத்திருந்தாலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளார், இவர் 8 மற்றும் 9 ஓவர்களில் கிட்டத்தட்ட 30 ரன்கள் கொடுத்து விட்டார் அதனால் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் ஏறிவிட்டது, ஆனால் புவனேஷ் குமார் இப்படி அதிக ரன்கள் கொடுக்கும் வீரர் இல்லை என்பதால் இன்றைய போட்டியில் புவனேஷ் குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.