கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி நாராயணன்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

0

shivani and jithan ramesh locked in glass room promo video: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று மிக சிறப்பாக போய் கொண்டிருந்தது. இந்நிலையில் v j அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் அளித்தார். அந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் உங்களுக்கு என்ன இடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.

இந்த நிலையில் நேற்று ஷிவானிக்கு அர்ச்சனா அவர்கள் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என்ற விருதை வழங்கினார். அதோடு சில அட்வைசையும் பண்ணினார். நீங்கள் சீரியலில் லீடிங் ரோலில் நடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு நிறைய திறமை இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இங்கு இருக்கும் இடமே தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது இனிமேலாவது விளையாடுங்கள் என கூறிகிறார்.

மேலும் இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனால் போட்டியாளர்கள் சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் தேர்வு செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் பிக் பாஸ் வீட்டில் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட உத்தரவிடுகிறார். இவர்கள் இருவரையும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியது ரசிகர்களுக்கு ஷாக் ஆக உள்ளது.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த போட்டியில் மிஸ்டர் பிக் பாஸ், மிஸ் பிக் பாஸ் என பட்டத்தினை வென்றார்கள் அப்படி இருக்கும்போது எப்படி ஈடுபாடு இல்லை என கூறலாம் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. வைரலாகும் ப்ரமோ வீடியோ.