பொங்கல் ரேசில் ஜெயிக்க.. பம்பரம் போல சுத்தும் தளபதி.! இப்ப என்ன காரியம் பண்ணி இருக்காரு பாருங்கள்..

சினிமா உலகில் போட்டி பொறாமைகள் அதிகம் அந்த வகையில் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே போட்டிகள் இருந்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும் கடந்த எட்டு வருடங்களாக இருவரின் படங்கள் சோலோவாக வெளிவந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு இரண்டு நடிகர்களின் திரைப்படங்களும் தற்செயலாக மோதுகின்றன இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

அஜித் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

மறுபக்கம் விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி உள்ளது இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவர இன்னும் ஒரு மாத காலம் இருந்தாலும் அதற்கு முன்பாகவே வெற்றி பெற என்னென்ன செய்ய முடியுமோ அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக  கொண்டுவர பல யூகங்களை வகுத்துள்ளார். முக்கிய இடங்களில் வாரிசு படத்தின் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 400 பஸ், நான்கு ரயில்களில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.  இதுபோக துணிவு படத்தை அடித்து தூக்க தனது ரசிகர் மன்றத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை ஏற்கனவே ஒரு தடவை அழைத்து விஜய் பனையூரில் மீட்டிங் போட்டார்.

அவர்களுக்கு பிரியாணி கொடுத்தார். அதனை தொடர்ந்து இப்பொழுதும் வேறு  மாவட்டங்களில் இருக்கும் முக்கிய  நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கும் வாரிசு திரைப்படம் வெற்றி பெற பல ஆலோசனைகளை பேசி அவர்களுக்கும் பிரியாணி போட்டு விருந்து கொடுத்துள்ளார் இதனால் இந்த பொங்கல் ரேஸில் வெற்றி செய்ய விஜய் என்னென்னவோ திட்டம் போட்டு வருகிறாராம்.

Leave a Comment