யாஷிகா ஆனந்த் போட்ட ட்வீட்க்கு.. சூப்பர் மீம்ஸ் போட்ட பிரேம்ஜி.! தலைவன யாருன்னு நெனைச்சிங்க.. பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியான படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தனது திறமையை வெளிக்காட்ட வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சல்ஃபர் மற்றும் கடமை செய் ஆகிய இரண்டு திரைப்படங்களில் யாஷிகாவின் ரோல் வித்தியாசமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் எகிறும் என கணிக்கப்பட்டுள்ளது.

யாஷிகா ஆனந்த் இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான  உடையில் தனது அழகை காட்டி  இளசுகளை தனது பிடியில் வைத்து இருந்து வந்துள்ளார் ஏனென்றால் அந்த அளவிற்கு மேலும்  அரைகுறையான ஆடைகளை காட்டவும் ரெடியாக இருக்கிறார் அம்மணி.

இப்படி இருக்க யாஷிகா ஆனந்த் தன்னுடன் இணைந்து நடித்த எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் கூறியது : நல்ல திறமையான இயக்குனரும், நடிகருமான எஸ். ஜெ சூர்யா அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சி. அவரிடமிருந்து பல அனுபவங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என கூறி பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்.

இதை சமூக வளைதளத்தில் பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அந்த ட்வீக்கு மீம்ஸ் ஒன்றை போட்டார். அதுவே சமூக வலைதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதோ அதை நீங்களே பாருங்கள்.