பாலா – சூர்யா மோதலை தவிர்க்க.. வணங்கான் படத்தில் நுழைந்த இயக்குனர் ஏ. எல். விஜய்.! தற்போதைய நிலைமை என்ன தெரியுமா.?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். மறுபக்கம் சூர்யா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி அதில் பல படங்களை வெளியிட்டும் காசு பார்த்து வருகிறார். தற்போது சூர்யா இயக்குனர் பாலாவுடன் கை கோர்த்து வணங்கான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் என்னும் படத்திலும் நடிக்க இருந்தார்

ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படத்தின் சூட்டிங் இரண்டு வருடங்களுக்கு தள்ளிப் போய்ச் உள்ளது. அந்த இடைப்பட்ட நேரத்தில் சூர்யா சிறுத்தை சிவா உடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் தற்போது சூரியா வனங்கான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே சில மோதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன

அதனால் வணங்கான் படப்பிடிப்பு பாதியிலே கடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்தில் உதவி இயக்குனராக  சூரரைப் போற்றப்பட இயக்குனர் சுதா கொங்கரா செயல்பட்டு வந்தார். அவர்தான் இதுவரை பாலா மற்றும் சூர்யா இருவரையும் சமாதானம் செய்து படப்பிடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக நடத்தி வந்தார். தற்போது சுதா கொங்கரா அவருடைய புதிய படத்தின் வேலைக்காக மும்பை சென்றுள்ளார்.

அவர் இல்லாததை எடுத்து சூர்யா மற்றும் பாலாவிற்கு மீண்டும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட சூரியா படப்பிடிப்பை பாதியிலே விட்டுவிட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்துள்ளாராம்.  பின்பு வணங்கான் படம் பாதியிலே கடப்பதால் படத்தின் தயாரிப்பாளரான தனக்கு மிகவும் நஷ்டம் என்பதை அவரே உணர்ந்து மீண்டும் பாலாவுடன் பேசி அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து படம் பாதியிலே நின்று விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் பாலா இந்த படத்திற்கு உதவி இயக்குனராக இருக்க ஏ எல் விஜய்யிடம் பேசியுள்ளாராம் அவரும் ஓகே சொல்லி உள்ளாராம். மேலும் ஏ எல் விஜய் எந்த ஒரு விஷயத்தையும் பக்குவமாய் எடுத்துச் செல்லுவதால் இனி சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படாமல் படப்பிடிப்பு நன்றாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment