தெலுங்கில் மாற்றப்பட்ட வலிமை படத்தின் “டைட்டில்” – என்ன பெயர் தெரியுமா.?

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. பல்வேறு தடைகளை தாண்டி இந்த திரைப்படம் அடுத்த வரும் பொங்கல் அன்று வெளிவர காத்திருக்கிறது. வலிமை திரைப்படம் இதுவரை நாம் பார்க்காத ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஏனென்றால் வலிமை படத்திலிருந்து பல்வேறு அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவே இருக்கின்றன. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது மேலும் வலிமை படத்திலிருந்து இதுவரை பல்வேறு விதமான அப்டேட்கள் வெளிவந்துள்ளன அடுத்ததாக வலிமை படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாக இருப்பதாக இயக்குனர் ஹச். வினோத்  கூறியுள்ளார்.

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு,  குக் வித் கோமாளி பிரபலம் புகழ் என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே வலிமை திரைப்படத்தில் நடித்து உள்ளனர். வலிமை திரைப்படம் முதல் நாள் மட்டுமே மிகப்பெரிய அளவில் கோடிகளை அல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதல் நாள் முதல் காட்சி அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடும் பட்சத்தில் ஒரு நாளில் மட்டும் 7, 8 ஷோக்கள் திரையரங்கில் ஓடும் அப்படி ஓடினால் மிகப்பெரிய வசூல் வேட்டையை காணும் என முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் நடத்தவிடாமல் மற்ற மொழிகளிலும் நடத்தத் திட்டம் போட்டுள்ளது வலிமை திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும்  வெளியாக இருக்கிறது.

இதனால் எதிர்பார்க்காத அளவிற்கு முதல்நாள் வசூல் வேட்டையை  எனதெரிய வருகிறது. இந்த நிலையில் வலிமை படம் தெலுங்கில் வேறு ஒரு பெயரை டைட்டிலாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. “பலம்” பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.இந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

Leave a Comment