சிவகார்த்திகேயன், சூரி இணைந்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

சின்னத்திரை மூலம் காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் எஸ்கே ப்ரோடுக்ஷன் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். எனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்பொழுது புதிய படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரித்த இருக்கும் நிலையில் அந்த படம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இன்று காலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு :கொட்டுக்காளி’ எனன டைட்டில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிஎஸ் வினோத் ராஜ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான பெப்பிள்ஸ் படத்தினை இயக்கியவர் தான். மேலும் இதனைத் தொடர்ந்து ஹீரோவாக சூரி நடிக்க இவருக்கு ஜோடியாக அன்னாபென் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபென் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பல மலையாள திரைப்படங்களில் நடித்த இவர் சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாக இருப்பதாகவும் விரைவில் இந்த படம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முதன் முறையாக சூரி ஹீரோவாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த படம் இரண்டு பகுதிகளாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Comment

Exit mobile version