பீஸ்ட் படம் மிகப்பெரிய வெற்றி.. எதிர்த்து மோதிய அந்த படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியன்..!

தளபதி விஜய் தொடர்ந்து ஆக்சன் படங்களில் பெரிதும் நடித்து வருகிறார் அந்த படங்களில் ஆக்ஷன் அதிகமாக இருந்தாலும் ஒரு பக்கம்  காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்றவை கொஞ்சம் இடம் பெறுவதால் ரசிகர்களையும் தாண்டி அனைவருக்கும் விஜய் படங்கள் ரொம்பவும் பிடிக்கின்றன அதன் காரணமாக இவரது படங்கள்..

தொடர்ந்து வெற்றியை பெறுகின்றன இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டப்பட படப்பிடிப்பு சென்னையில் போய்க்கொண்டிருக்கிறது இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.

வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இப்படி போய்க்கொண்டு இருக்க.. மறுப்பக்கம் விஜய் பற்றிய செய்து கொண்டு வெளியாகி உள்ளது. திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி உள்ளார்.

பிறமொழி படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தமிழ் படங்கள் எப்பொழுதுமே வசூல் ரீதியாக தமிழ்நாட்டில் ஓடிவிடும் அப்படித்தான் தளபதி விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் சூப்பராக ஓடியது. அதே சமயத்தில் கே ஜி எப் படமும் நன்றாக ஓடியது அதனால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

ஆனால் வசூல் ரீதியாக பார்க்கையில் கேஜிஎப் 2 படத்தை விட தமிழ்நாட்டில் பீஸ்ட் திரைப்படம் தான் பல மடங்கு வசூல் செய்தது தமிழ்நாட்டில் எப்பொழுதுமே தமிழ் நடிகர்கள் படங்கள் தான் அதிக வசூலை அள்ளும் என வெளிப்படையாக கூறி உள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன் இதனால் தளபதி ரசிகர்கள் தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

 

Leave a Comment