டிக்டாக்கின் மூலம் பலர் பிரபலம் அடைந்துள்ளார். அந்த வகையில் குறைந்த காலகட்டத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கவர்ச்சியால் கவர்ந்தவர் டிக் டாக் சூர்யா.
இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் ஒரு மார்க்கமாக தான் இருக்கும். இவரைப் பற்றி பலர் குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது வீடியோக்களை இணையதளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு கூட இவர் பாலியல் தொழில் செய்கிறார். எனவே போலீசார் கைது செய்து விட்டார்கள் என்று விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால் சூர்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இது பொய்யான தகவல் என்று கூறியிருந்தார்.
இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரின் உண்மையான பெயர் சுப்புலட்சுமி ஆனால் சமூக வளைதளத்தில் சூர்யா என்ற பெயரால் பிரபலமடைந்தார். இவர் ஒரு மார்க்கமாக வீடியோவை வெளியிடுவதால் ரவுடி பேபி என்று அனைத்து ரசிகர்களும் அழைப்பார்கள்.
இந்நிலையில் தற்பொழுது சூர்யா மாஸ்டர் திரைப்படத்தை பற்றி சில தவறுகளை கூறியுள்ளார். அதாவது முதலில் நான் மீடியாவில் இருக்கிறேன் எனவே நான் இதைப்பற்றி கூறுகிறேன் என்று தொடங்குகி மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் விஜய் சேதுபதியை விஜய் கொக்கியில் மாட்டி உடன் விஜய் சேதுபதியின் உயிர் பிரிந்து விடும். இப்படி உடனே விஜய் சேதுபதியின் உயிர் போய் விடாமல் அவர் விரலை மடித்து எப்பொழுதும் சொல்வது போல உனக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் என்ற வசனத்தை கூறியிருக்கலாம். அதற்கு விஜய் ஏண்டா இன்னுமா இந்த வசந்தத்தை பேசுற என்று காப்பை ஏத்தி விட்டு ஓங்கி நெஞ்ச பார்த்து குத்தி இருந்தாருனா செம மாசா இருந்திருக்கும்.
இப்படி கூறியிருந்தால் 100 கோடிக்கு பதிலாக 200 கோடி வசூலாகி இருக்கும் என்றும் பின்னாடி திரும்பி யாரிடமும் இத்திரைப்படத்தின் டைரக்டர் லோகநாதன் தான் அப்பா என்று கூறுவது போலவும் பின்னாடி இருப்பவர் இல்ல லோகேஷ் கனகராஜ் என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ்க்கு டிப்ஸ் கொடுக்குவதுபோல இது ஒன்று மட்டும் தான் அண்ணா குறை என்றும் கூறியிருந்தார்.