சிங்கிள் சாபம் சும்மா விடுமா என்ன.? எப்பப்பாரு ஜோடி ஜோடியா.. டிக் டாக்கிற்கு ஆப்பு வைத்த சிங்கிள் பசங்க

Tik Tok
Tik Tok

டிக்டாக் செயலி வந்த சில மாதங்களிலேயே பொது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதுவும் சமீப காலமாக குழந்தைகள் முதல் பல்லு போன பாட்டி வரை டிக்டாக் செயலிகள் இருக்கிறார்கள், இந்த டிக் டாக் செயலி பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் டவுன்லோட் செய்து அதில் வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.

அதிலும் சிலர் தன்னுடைய திறமையை காட்டுவதற்காகவும் சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காகவும் டிக் டாக் செயலியை பெரிதும் பயன்படுத்துகிறார்கள், ஆனால் சமீபகாலமாக டிக்டாக்கில் பாலியல் போன்ற ஆபாச வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில பெண்கள் ஆண்களுக்கு அடிமையாகி பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், சமீபத்தில்கூட காதல் மன்னன் கண்ணன் வலையில் பல பெண்கள் விழுந்தார்கள் அவர்களிடமிருந்து கண்ணன் பணத்தை ஆட்டைய போட்டார் பின்பு சிக்கிக்கொண்டார். மேலும் டிக்டாக் செயலி மூலம் பல பெண்கள் ஆபாச வீடியோக்களை பதிவிடுகிறார்கள்.

மேலும் டிக் டாக் செயலியில் இலக்கியா என்ற பெண் மிகவும் ஆபாசமாக வீடியோவை வெளியிட்டார் அதனால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது, அதற்கு அவரிடம் குழந்தைகள் டிக் டாக் செயலியை பார்க்கிறார்கள் நீங்கள் இவ்வாறு வீடியோவை பதிவிடலாமா என கேள்வி எழுப்பிய பொழுது அவர் குழந்தைகளிடம் ஏன் மொபைலை கொடுக்கிறீர்கள் என நெற்றிப்பொட்டில் அடித்தது போல் பதிலளித்தார்.

இப்படி தொடர்ந்து இந்த செயலியில் ஆபாசம் அதிகரித்து வருவதால் பலர் இந்த செயலியை விட்டு வெளியே வருகிறார்கள் ஆரம்பத்தில் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.4 ரேட்டிங் பெற்றிருந்த இந்த செயலி தற்போது இரண்டுக்கும் குறைவான ஸ்டார் ரேட்டிங் பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஜோடி என்ற பெயரில் காதல் செய்பவர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாத சிங்கிள் பசங்க இந்த டிக் டாக் செயலியை வெறுத்து வருகிறார்கள்.