சன்னி லியோனுடன் நடிக்கும் டிக் டாக் ஜி.பி.முத்து.! அதுவும் எந்த மாதிரி கதாபாத்திரம் தெரியுமா.?

தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பேசப்பட்டு வரும் நபர் தான் ஜி பி முத்து இவர் தமிழகத்தில் டிக் டாக் செயலி இருக்கும் பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும் டிக் டாக் செயலியில் இவர் செய்யாத அட்டூழியமே இல்லை என்ற அளவிற்கு தாறுமாறாக பட்டையை கிளப்பினார் ஒரு காலத்தில் டிக் டாக் செயலியை மூடிய பிறகு சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார்.

யூடியூப் சேனல் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இவரை நிறைய பேர் பின் தொடர ஆரம்பித்து விட்டர்கள் தற்பொழுது யூடியூப் சேனல் மூலம் இவர் நிறைய திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறார் ஜி.பி.முத்து ஏறக்குறைய  யூடியூப் சேனலில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர்கள் இவரை பின் தொடர்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

மேலும் இவரை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இவர் பிரபல நடிகை சன்னி லியோன் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் சன்னி லியோன் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர்களைத் தவிர நடிகர் சதீஷ் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி படத்தை சசிகுமார் மற்றும் வீரசக்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்களாம் இவர்கள் தயாரிக்கும் பெயரிடாத திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் போன்றோர் பலரும் நடிக்கிறார்கள் இதனால் இந்த திரைப்படத்தை மக்கள் பலரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஜி பி முத்து இவருடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு கொடுத்து வச்சிருக்கு என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version