நான் 40 கோடி கேட்கவில்லை 400 கோடி தான் கேட்டேன்.! அதுவும் அந்த சீனுக்கு மட்டும் 100 கோடி மிஷ்கின் அதிரடி பேச்சு

விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் துப்பரிவாலன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.விஷால் நடித்து வந்தார் இந்த திரைப்படத்தை விஷால் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார் இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கு காரணம் போட்ட பட்ஜெட்டை விட 40 கோடி அதிகமாக மிஸ்கின் கேட்டதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் விஷால் முடியாது எனக் கூறியதாகவும் தகவல் கிடைத்தது.

அதனால் இதுவரை மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மீதி பாதியை விஷாலெ இயக்க இருக்கிறார் என்ற தகவலை அவரே உறுதி செய்துள்ளார். இதுபற்றி மிஷ்கினிடம் கேட்டதற்கு 40 கோடி இல்லை 400 கோடி கேட்டேன். 100 கோடி செலவில் பாதி படத்தை முடித்து விட்டு மீதி படத்திற்கு 100 கோடி வேண்டும்.

அதேபோல் விஷால் கிளைமாக்ஸ் காட்சியில் சாட்டிலைட் இல் இருந்து குதிப்பது போல் இருப்பதால் அதற்கு மட்டும் 100 கோடி செலவில் அதனால் மொத்தமாக 400 கோடி கேட்டேன் என மிகவும் நக்கலாக பதில் அளித்தார் மிஸ்கின். இவர் கூறியது கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சிக்கி உள்ளது.

இதற்கு முன் இதே போல் பாலா இயக்கிய வந்த வர்மா படம் சரியில்லை என ஒரு புதுமுக இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்று படத்தை முடித்தார்கள் அந்த கதைதான் இதுவும் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment