2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன் இந்த திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார் விஷாலுடன் அனு இம்மானுவேல் நடித்திருந்தார், ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று இந்த திரைப்படம் வெற்றி பெற்றது,
தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள், இவரின் வித்தியாசமான கதைகளும் அதனை படமாக்கும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவரும், அந்த வகையில் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.

துப்பறிவாளன் முதல் பாகத்தில் அனு இம்மானுவேல் நடித்து இருந்தார் ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஆஷியா நடிக்க இருக்கிறார். மேலும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் பிலிம் பேக்டரி மூலம் நடிகர் விஷாலை தயாரிக்க இருக்கிறார்.

விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஆஷியா ஒரு மாடல் அழகி இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார், இவர் கவர்ச்சி காட்டுவதற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் மிகவும் அழகாக இருக்கிறார் அதனால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

