பல பிரச்சினைகளுக்கு இடையே வெளியானது விஷாலின் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்.! இதோ போஸ்டர்

2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவானது, இந்த திரைப்பட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினை என பலர் நடித்திருந்த நிலையில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.

துப்பறிவாளன் முதல் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தது படக்குழு, அதனால் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாள் ஷூட் நடக்க இருந்தது, இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் பிரசன்னா, கௌதமி, ரகுமான், அக்ஷயா ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி செலவுகளை இயக்குனர் மிஷ்கின் அதிகப்படுத்துவதால் படத்திலிருந்து மிஸ்கின் நீக்கப்பட்டார்  அதனால் மீதி திரைப்படத்தை விஷாளே இயக்கி நடித்து வருகிறார்.

அதேபோல் படத்தை தயாரிப்பதும் விஷால்தான் இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் கையில் குடையுடன் வரும் விஷால் விசாரணை அதிகாரியாக மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment