துப்பாக்கி 2 படத்தில் ஹீரோயின் இவர்தான்.! இதோ அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் பல தோல்விகளை படங்களை கொடுத்து வந்தார் அந்த தோல்வியிலிருந்து எப்படியாவது மீள முடியாதா என ஏங்கிக் கொண்டிருந்த பொழுது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கை கொடுத்து தூக்கி விட்டார். அந்த திரைப்படம் தான் துப்பாக்கி.

துப்பாக்கி திரைப்படம் 2012ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியது இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார், துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார், விஜய் திரைப்படத்தில் இந்த திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து கத்தி, சர்கார் ஆகிய திரைப்படங்களை இயக்கினார், இந்தநிலையில் விஜய் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது யார் அந்த இயக்குனர் என அனைவரும் கேள்வி கேட்டு வரும் நிலையில் இருக்கிறார்கள். அந்தவகையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் லிஸ்டில் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் விஜயிடம் கதை கூறியுள்ளதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. அது கண்டிப்பாக துப்பாக்கி 2 திரைப்படமாக இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைய விரும்புவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதனால் கண்டிப்பாக துப்பாக்கி2 இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

https://twitter.com/itz_TFI/status/1241690716524298246?s=20

Leave a Comment