துப்பாக்கி படத்தில் இடம்பெறாத மிரட்டலான காட்சி.! இதுவரை யாரும் பார்த்திராத காட்சி இதோ.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் துப்பாக்கி, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதனால் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யுத் ஜம்வால் சத்யன் மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார்.

இப்பொழுது துப்பாக்கி படத்தை திரையில் ஒளிபரப்பினால் இன்னும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள் அந்த அளவு அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி அமைந்திருந்தது, இந்த படத்தில் இடம்பெறும் பல காட்சிகளை நாம் மீண்டும் மீண்டும் ரசித்திருப்போம்.

அதிலும் ஒரே நேரத்தில் 12 கண் சூட், மற்றும் ஐ அம் வெயிட்டிங், க்ளைமாக்ஸ் காட்சிகள் என ரசிகர்களை கவர்ந்த காட்சிகள் என கூறலாம், இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத, படத்திலும் இடம் பெறாத ஒரு காட்சி புகைப்படத்துடன் இணையதளத்தில் கசிந்துள்ளது.

படத்தில் இரண்டாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் விஜயிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போல் இருக்கிறது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

thuppaki
thuppaki

Leave a Comment