துணிவா வாரிசா எது வெற்றி.? வெளியானது ரெட் ஜெயன்ட் ரிப்போர்ட்

0
thunivu-vs-varisu
thunivu-vs-varisu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் திரைக்கு பின்னால் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமாவில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய படத்தில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் பல திரைப்படங்களின் மூலம் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதும் உண்டு.

இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் மோதிக் கொண்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாரிசு மற்றும் துணிவு ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.

எனது தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியான நாளிலிருந்து இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் ரசிகர்கள் இந்த வருடம் துணிவு பொங்கல், வாரிசு பொங்கல் என அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக சண்டையிட்டு வருகிறார்கள் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக தற்போது ரெட் ஜெயண்ட் ஒரு புதிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதாவது துணிவு மற்றும் வாரிசு ரெண்டு படமுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதனால் இந்த இரண்டு படங்களும் பொங்கலில் வெற்றி அடைந்தவர்களாக ரெட் ஜெயன்ட் ரிபோர்ட் வெளியிட்டு உள்ளது.

மேலும் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தங்களுடைய அடுத்த படத்தின் வேலையை செய்து வருகிறார்கள் அந்த வகையில் அஜித்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார். விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.