சபரிமலையில் துணிவு போஸ்டர் – இப்பவே ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்.!

0
thunivu
thunivu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  அஜித் குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க மீண்டும் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நடிகர் அஜித்திற்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமே இருக்கிறது.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக  ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாளம் நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு திருவிழா போல கொண்டாட முனைப்பு காட்டி உள்ளனர் அதற்கு முன்பாக படக்குழு திரையரங்குகளை கைப்பற்றும் முனைப்புகளில் களம் இறங்கி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் போஸ்டர்களை அடித்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் ரசிகர்கள் இன்னமும் தரமாக செய்வார்கள் அந்த வகையில் ஒரு சில ரசிகர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று அங்கு அஜித் பேனரை காட்டி படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

thunivu
thunivu