நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஓடி வருகிறார். அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இவர் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது அவருக்கு பக்கபலமாக துணிவு திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி அமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாகவே ரசிகர்களை கட்டி இழுக்க துணிவு திரைப்படம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது புதிய போஸ்டர்களையும் திடீரென வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து உள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்குமார் வைட் அண்ட் ட்ரெஸ்ஸில் செம்ம மாஸாக இருக்கிறார் மற்றொரு புகைப்படத்தில் பிளாக் ட்ரெஸ்ஸில் இருக்கிறார் இந்த இரண்டு புகைப்படங்கள் மட்டும் அல்லாமல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புகைப்படமும் வெளிவந்துள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸாக இருக்க நிச்சயம் துணிவு திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடிக்கும் என கூறி வருகின்றனர். மேலும் அஜித்தின் போஸ்டரை தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர் இதோ துணிவு திரைப்படத்தில் அஜித் செம மாஸாக இருக்கும் அந்த அழகிய போட்டோவை நீங்களே பாருங்கள்.

