வசூலில் புதிய உச்சத்தை தொட்ட “அஜித்தின் துணிவு”.. உலகம் முழுவதும் அள்ளிய கலெக்ஷன் இதோ

நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு படம் இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, பிரேம், மோகனசுந்தரம்  மற்றும் பலர் நடித்திருந்தனர் அதேசமயம் துணிவு படம் முழுக்க முழுக்க சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் மற்றும் காமெடி, ஆக்சன் போன்றவை சிறப்பாக இருந்தது.

மேலும் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து இந்த திரைப்படம் பாசிட்டிவோட விமர்சனத்தை பெற்று வருவதால் இன்று வரையிலும் பல்வேறு இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக துணிவு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படம்..

வெளியாகி எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து நாளுக்கு நாள் தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி தமிழகத்தில் 100 கோடி மேல் வசூல் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி பார்க்கையில் தற்போது வரை உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் 225 கோடி வசூலித்து இருக்கிறதாம்.

இதுவரை வெளிவந்த அஜித் படங்களில் இது ஒரு பெஸ்ட்டான வசூல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் புக்கிங் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் வருகின்ற நாட்களிலும் துணிவு படத்தின் கலெக்ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் படகுழுவும் சரி, நடிகர் அஜித்தும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment