என்னுடைய சாதனையை என்னால் மட்டும் தான் உடைக்க முடியும்.! மிரட்டும் துணிவு படத்தின் மொத்த வசூல்

0
ajith
ajith

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. இதனால் அஜித்தின் அடுத்த படமான துணிவு திரைப்படம் மாஸான படமாக இருக்க வேண்டும் என பலரும் கருதினார். அதற்கு ஏற்றார் போல இயக்குனர் ஹச். வினோத் ஒவ்வொரு சினையும் செம மாஸாக எடுத்தார்.

படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. துணிவு படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை  பார்க்க முடிந்தது. அவரது நடிப்பு சிறப்பாக ப்ரஸ்ட் கிளாஸ்  இருந்தது, கதையும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

துணிவு திரைப்படத்தை எதிர்த்து வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அந்தப் படமும் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் வசூலில் யார் கை ஓங்கி இருப்பதை தெரிந்து கொள்ள மக்களும், மீடியாக்களும் அதிகமாகவும் காட்டியது தமிழகத்தில் அஜித்தின் துணிவு கை அதிக வசூலை அள்ளி முதல் இடத்தை பிடித்தது.

மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை அஜித் துணிவு திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அஜித்தின் பழைய ரெக்காடான வலிமை மற்றும் விசுவாசத்தின் வசூல் சாதனை முறையடித்து ஆல் டைம் பெஸ்ட் வசூல் சாதனை என்கின்ற பட்டத்தை துணிவு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.