துணிவு படம் எப்படி இருக்கு.! இதோ விமர்சனம்…

0
tathunivu-public-review
tathunivu-public-review

thunivu movie review : அஜித் நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சமீபத்தில் துணிவு திரைப்படத்திலிருந்து வெளியாக்கிய சில்லா சில்லா பாடல், காசேதான் கடவுளடா பாடல் என ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமே இல்லாமல் வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் பிரபலங்களின்ம் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக இன்று 11ஆம் தேதி திரையரங்கில் வெளியிட  படக்குழு திட்டமிட்டது அதேபோல் இன்று உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்துடன் வாரிசு திரைப்படமும் வெளியாகியுள்ளது அதனால் ரசிகர்களுக்கு இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

துணிவு திரைப்படம் பேங்கில் லோன் எடுக்கும் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக எச் வினோத் காட்டியுள்ளார் இது அனைத்து பொதுமக்களும் பார்க்க வேண்டிய படம் என பொதுமக்கள் கூறியுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் குறிப்பாக லோன் எடுப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனவும் கூறியுள்ளார்கள்

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை பார்த்த மக்கள் என்ன கூறியுள்ளார்கள் இதோ விமர்சனம்.