யார் சொன்னது அஜித் டூப் போட்டதுன்னு.! வீடியோவை வெளியிட்டு அலறவிடும் போனி கபூர்

0
ajith
ajith

தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடுபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படத்தில் அஜித்தின் துள்ளலான நடிப்பு மேலும் சிறப்பாக இருந்தது அதேசமயம் அவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்தது சிறப்பாக இருந்தது.

இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே 123 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.  உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது இன்னமும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால் வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கு போடப்பட்டுள்ளது

இதனால் அஜித்தும் சரி துணிவு பட குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டு இன்னமும் எதிர்பார்ப்பை ஏற்றி  இருக்கிறது துணிவு படக்குழு.. துணிவு திரைப்படத்திலிருந்து ஸ்டண்ட் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது

அதில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் மாஸ் தெறி என தனக்கு தெரிந்த கமெண்ட்டுகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் துணிவு திரைப்படத்திலிருந்து வெளிவந்த அந்த ஸ்டண்ட் மேக்கிங் வீடியோவை..