“துணிவு” படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.? படப்பிடிப்பு எப்போ முடிகிறது தெரியுமா.?

அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கைப்பற்றி வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் தனது ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 61-வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக  பாங்காங்  சென்று இருக்கிறது.

அண்மையில் கூட நடிகர் அஜீத் சென்னை விமான நிலையத்திலிருந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது துணிவு ஒரு முழுக்க முழுக்க பேங்க் ராபரியை  மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது அதே சமயம் இந்த படத்தில் சமூக அக்கறை சில சில விஷயங்கள் இருப்பதாக ஹச் வினோத் சொல்லி உள்ளார் மற்ற படங்களை விட இந்த படம் நிச்சயம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் என  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசதி உள்ளது. துணிவு பணத்திலிருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் போஸ்டர் ஆகியவை மட்டுமே வெளிவந்துள்ளது அதுவும் மிரட்டலாக இருந்துள்ளது.

இருப்பினும் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தில் ஷூட்டிங் எப்பொழுது முடிகிறது படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது அது குறித்து பார்ப்போம். துணிவு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 அல்லது 10 தேதிகள் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கிறது அதற்கான அறிவிப்பை போனி கபூர் இன்னும் சில வாரங்களில் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது ஒரு வேலை பொங்கலுக்கு அஜித் – விஜய் படங்கள் மோத கூட வாய்ப்புகள் இருக்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment