கே ஜி எஃப் 2, பொன்னியின் செல்வன் பட சாதனையை உடைத்து முன்னேறிய துணிவு.! எங்கு தெரியுமா

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து அஜித் நடித்த துணிவு திரைப்படம்..

கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது. வழக்கம் போல அஜித் ரசிகர்கள் முதல் இரண்டு நாட்களில் கோலாகலமாக திரைப்படத்தை கொண்டாடினர் அதன் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக துணிவு திரைப்படத்தை பார்த்து நல்ல கமெண்ட் கொடுத்து வந்தனர்.

அதன் காரணமாக நல்ல வசூலையும் தொடர்ந்து அள்ளி வருகிறது இதுவரை உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கின்றது. வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் நடிகர் அஜித்தும் சரி, துணிவு படக்குழுவும் சரி செம்ம  சந்தோஷமாக இருக்கிறது.

மேலும் பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் குறித்து ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படம் பல்வேறு இடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது அந்த வகையில் தஞ்சாவூரில் ஜீவி திரையரங்கில் துணிவு வசூல் சாதனை செய்திருக்கிறது.

38 வருடங்களில் அதிகம் வசூல் செய்த படமாக துணிவு வந்துள்ளது. அதோட பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2 ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறையடித்து துணிவு இருக்கிறதாம் இதனால் ஜிவி திரையரங்கம் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் அதை வெளிகாட்டும் பட்சத்தில் தனது டுவிட்டர் பக்கத்திலும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறது இதோ நீங்களே பாருங்கள்.

thunivu
thunivu

Leave a Comment