துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க “சமுத்திரக்கனி” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
thunivu
thunivu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இவர் கடைசியாக நடித்த துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படம் வெற்றி பெற முக்கிய காரணம் இந்த படத்தின் கதை என சொல்லலாம்..

துணிவு படத்தில்  ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்தது மேலும் படத்தில் நடித்த அஜித், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், தர்ஷன், அமீர், பாவனி, மகாநதி சங்கர், பிரேம், பாலா சரவண்ணன் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர்.

படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை ஆரம்பத்திலேயே பெற்றது. போகப்போக குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட்டினர். மேலும் படம் இதுவரை 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் பட்டி தொட்டி எங்கும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது.

இதுவரை மட்டுமே அஜித்தின் துணிவு திரைப்படம் சுமார் 230 கோடி வசூல் பார்த்து உள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு தற்பொழுது 30 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில்  உயர் போலிஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரக்கனி.

படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.