கூடவே இருந்து கொண்டு பார்த்திபனை சுத்தவிட்டு பார்க்கும் விஜய் சேதுபதி..! இணையத்தை மிரட்டும் துக்ளக் பட டீசர்..!

0

thuklak movie teaser: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைபடத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

பொதுவாக ஹீரோவாக ஒரு நடிகர் நடித்து விட்டால் அதன் பிறகு துணை கதாபாத்திரத்தில் அல்லது எதிர் கதாபாத்திரத்தில் நடிக்க யோசிப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது எனக்கு நடிகராக இருப்பதை விட வில்லனாக இருப்பது தான் மிகவும் பிடிக்கும் என பலர் திரைப்படத்தில் மெகா ஹிட் வில்லனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்

கைவசம்மாக கடைசி விவசாயி,  மாமனிதன் லாபம் போன்ற பல்வேறு திரைப்படங்களை வைத்திருந்தாலும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைபடத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

இது ஒரு பக்கமிருக்க பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.  இவ்வாறு சமீபத்தில் வெளிவந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.