எம்ஜிஆர்க்கு எடுபிடி மாதம் மூன்று ரூபாய் சம்பளம்..! ஆனால் சினிமாவில் உச்சம் தொட்ட அந்த பிரபலம் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னன் இசை சக்கரவர்த்தி  இசை உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர் தான் எம் எஸ் விஸ்வநாதன். அந்தவகையில் இவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்து பெருமைக்கு உரியவராக அமைந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய இசையில் புதுமையையும் கொடுத்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே ஹார்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டார் அந்தவகையில் தன்னுடைய 13 ஆம் வயதில் மேடையில் தான்  திறனைக் காட்ட ஆரம்பித்த விஸ்வநாதன் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆபீஸ் பாய் ஆக பணிபுரிந்து வந்தார்.

அப்பொழுது அவருடைய மாத சம்பளம் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே அந்த வகையில் அவர் சிறுசிறு நாடகங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றியதன் பிறகு சிறந்த இசையமைப்பாளராக  அவதாரம் எடுத்தார்.

அந்தவகையில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா என்ற திரைப்படத்தில்  இவர் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தவகையில் விஸ்வநாதனை பார்த்து எம்ஜிஆர் எடுபிடி வேலை செய்யும் இவனுக்கு எப்படி மியூசிக் தெரியும் என  எண்ணினார்.

அதனால் இவர் இசையமைத்த பாடலை கூட எம்ஜிஆர் கேட்க மறுத்துவிட்டார். ஆனால் தயாரிப்பாளரோ எம்எஸ் விஸ்வநாதன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதனால் ஹீரோவை மாற்றினாலும் மாற்றுவேன் தவிர இசையமைப்பாளர் மாற்ற மாட்டேன் என உறுதியாக இருந்தார்

இதனால் எம்ஜிஆரும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு அந்த பாடலையும் கேட்டார். இவ்வாறு அந்த பாடலை கேட்டு பூரித்துப் போன எம்ஜிஆர் உடனே விசுவநாதன் வீட்டை தேடி செல்ல ஆரம்பித்து விட்டார்  பின்னர் அவருக்கு பாராட்டு தெரிவித்து விட்டு எம்ஜிஆர் வீடு திரும்பினார்.

ms viswanathan-1
ms viswanathan-1

அதன்பின்னர் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் தான் இசையமைத்தார். அந்த வகையில் எம்எஸ் விஸ்வநாதனின் அனைவரும் மெல்லிசை மன்னன் என கொண்டாட பட்டார்கள்.

Leave a Comment