இன்று ஒரே நாளில் OTT-யில் வெளியாகும் மூன்று பிரம்மாண்டமான திரைப்படங்கள்.!

சமீப காலங்களாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான படங்கள் குறித்த தகவல் தற்பொழுது பட குழுமினார்கள் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

யானை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் யானை. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள 1500+ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இத்திரைப்படத்திற்கு கோபிநாத் ஒலிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜே பி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களை தொடர்ந்து சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, சரத்குமார்,கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபால் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ரவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக நடித்த ப்ரியா பவானி சங்கர் ஜெபமலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடி டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் கைப்பற்றியது.அந்த வகையில் இந்த படம் இன்று ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி முதல் ஜீ5 தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

yaanai
yaanai

தமிழ் ராக்கர்ஸ் – வெப் சீரிஸ்: தமிழில் ராக்கர் பைரஸி சைபர் கிரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சியளிக்கும் ஒரு கிரைம் தொடராகும். அதாவது இந்த சீரியல் தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையை பற்றி கூறுகிறது. மேலும் இந்த தொடரில் ஹீரோ இணைய திருடர்களால் இணையத்தில் தேடப்படுவதை எதிர்த்து போராடுகிறார்.இதன் காரணமாக யார் இவ்வாறு செய்கிறார் என்பதற்கான பின்னணியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.இவ்வாறு சைபர் கிரைம் திருடர்களுக்கு எதிராக தொடர் வெளியாகிறது.

இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த தொடரில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதனை தொடர்ந்து வாணி போஜன்,ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி, வைத்தியநாதன் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

arun vijay
arun vijay

இவர்களைத் தொடர்ந்து மனோஜ் குமார் கலைவாணன் என்ற எழுத்தாளர் எழுத அறிவழகன் என்பவர் இயக்குகிறார் மேலும் ஏவிஎம் புராடக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி லிவ் தளத்தில் இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மகள் (மலையாளம்): மீரா ஜாக்சன், தேவிகா, சஞ்சய் மற்றும் ஜெயராம் ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை சத்தியம் அந்திகாட் இயக்கத்தில் உருவாகியுள்ளது மனோரமா மேக்ஸ் தளத்தில் திரையரங்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று வெளியானது.

Leave a Comment