கமலை வைத்து படம் பண்ண போகும் மூன்று முத்தான இயக்குனர்கள்..! உறுதியான தகவல்..

0
kamal-
kamal-

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல கதைகளை சரியாக தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் உலக நாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்து, தயாரித்த திரைப்படம் விக்ரம் இந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 450 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் இயக்குனர் சங்கருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த், பாபி சிம்ஹா, யோகி பாபு, ஆடுகளம் நரேன் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே..

இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அவர் யாருடன் இணைவார் என்பது பலரின் எதிர் பார்ப்பாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது ஆம் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்தடுத்து நடிக்க போகும் திரைப்படங்கள் குறித்தும் தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் அடுத்ததாக இயக்குனர் ஹெச். வினோத் உடன் முதலாவதாக இணைகிறார் இரண்டாவதாக இயக்குனர் மணிரத்தினம் மூன்றாவதாக இயக்குனர் லோகேஷ் உடன் அவர் இணைந்து படம் பண்ண உள்ளார் என கூறப்படுகிறது. மூன்று சிறந்த இயக்கங்களுடன் கமல் அடுத்து படம் பண்ண உள்ளதால் அந்த மூன்று படங்களுமே வெற்றி பெறும் என கூறப்படுகிறது.