தல அஜித் சமீபகாலமாக வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கிராமத்து கதை, சமூக அக்கரை படங்களை தொடர்ந்து தற்போது கூட பைக் மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளார் இந்த திரைப்படமும் மக்களை கவரும் படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் அஜித், ஹச். வினோத் காம்போ எப்பொழுதும் புதுமையான வித்தியாசமான ஒன்றை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது அதில் இரண்டாவதாக வலிமை திரைப்படம் உருவாகி உள்ளதால் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளதால் படத்தை திரையரங்கில் பார்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர்.
அதற்கு ஏற்றபடி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக வலிமை படத்திலிருந்து அப்டேட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ ஆகியவை வெளிவந்த நிலையில் இந்த படம் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி வந்ததால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றன.
தற்போது கூட வலிமை திரைப்படத்தில் 3 மலையாள நடிகர்கள் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வலிமை இப்படக்குழு என்னதான் பெரிய அளவில் யார் யார் நடித்து உள்ளனர் என்பதை மறைத்து வைத்திருந்தாலும் தற்பொழுது ஒரு வழியாக நடித்தவர்கள் பற்றி வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தினேஷ் பிரபாகர், துருவன், பெர்ல்லி மானே போன்றவர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை வலிமை படத்தில் நடித்த தினேஷ் பிரபாகரன் உறுதிப்படுத்தியுள்ளார் நாங்கள் வலிமை படத்தில் நடித்து உள்ளோம் என்பதை இச்செய்தி இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.
