என் மனதை கவர்ந்து இழுத்த மூன்று நடிகைகள் இவங்க தான் – மனம் திறந்த மிஷ்கின்.!

0
mysskin
mysskin

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவரது திரைப்படங்கள் இதுவரை எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமல் தனித்தன்மையாக இருப்பதால் இவரது படத்தை பார்க்கவே மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இவர் துப்பறிவாளன் திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது ஒரு புதிய படத்தை உருவாக்கியுள்ளார். ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் தான் பிசாசு இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது படம் குறித்தும் பேசினார் குறிப்பாக சினிமா உலகில் தனக்கு பிடித்த நடிகைகள் யார் யார் என்பதை வெளி உலகிற்கு முதன் முறையாக கூறியுள்ளார். என்னுடன் பணியாற்றிய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை பாவனா நான் எந்த கதாபாத்திரம் மெதுவாக சொன்னாலும் உடனே அதை செய்துமுடிக்க கூடியவர் என்னை மிகவும் கவர்ந்து இழுத்தவர்.

அடுத்ததாக நடிகை பூர்ணா அவரைப் போலவேதான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் அதில் நடித்து வெற்றி காண கூடியவர். அவரது நடிப்பு வேற லெவல் என தெரிவித்தார் மூன்றாவதாக மலையாள நடிகையான நித்தியா மேனன் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து அசத்துவார் அதிகம் டேக் எடுக்க மாட்டார் என கூறினார்.

இந்த மூன்று நடிகைகள் நான் பார்த்து வியந்த நடிகைகள் என கூறினார் மிஷ்கின் ஒரு படத்தை இயக்க நாம் சொல்லுகின்ற கதாபாத்திரம் ஏற்றார் போல நடிக்க வேண்டும் பலர் நடிக்க மறுத்து விட்டனர் ஒரு சிலர் அதிக டேக் எடுப்பார்கள் ஆனால் மிஷ்கின் இந்த மூன்று நடிகைகளுடன் பணியாற்றும் போது மட்டும் அவ்வளவு ஈசியாக இருக்கும் எனவும் மறைமுகமாக சொல்லி உள்ளார்.