அந்த இரண்டு வாரிசு நடிகர்களும் என் காதலர்கள் கிடையாது.! மனம் திறந்த பிரியா ஆனந்த்.

0
priya ananth
priya ananth

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டவர் தான் பிரியா ஆனந்த். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் அத்தகைய படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

என்றாலும் தனது விடா முயற்சியின் மூலம் தமிழ் சினிமா உலகில் பயணித்து வந்த இவருக்கு எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி அடைந்தன் மூலம் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கண்களில் பட தொடங்கினார் அந்தவகையில் இவர் எதிர்நீச்சல் வணக்கம் சென்னை ஒரு ஊர்ல ரெண்டு, ராஜா வை ராஜா வை ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது.

மேலும் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் ஆகவும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தற்பொழுது சிறப்பாக பயணித்து வருகிறார்.இந்த நிலையில் பிரியா ஆனந்து அதர்வாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன இதுபோன்று பிரியா ஆனந்தும் கௌதம் கார்த்திக்கும் காதலிப்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் திருமணம் வரை சென்று விட்டனர் என சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதுகுறித்து ப்ரியா ஆனந்த் அவர்களிடம் கேட்ட பொழுது இவர்கள் இருவரில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்று கேட்டதற்கு பிரியா ஆனந்த் அவர்கள் இவர்கள் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் இவர்கள் எனது காதலர்கள் கிடையாது என கூறினார் மேலும் நாங்கள் மூவரும் தனித்தனியாகவே இதனை உறுதி செய்து கொண்டோம்.

மேலும் அவர்கள் இருவரும் நான் சிறப்பாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள் அது போல நானும் என் நண்பர்கள் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என கூறி வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.