இந்த வார டி ஆர் பி-இல் விஜய் டிவியை அடித்து தும்சம் பண்ணிய சன் டிவி.! டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள் இதோ..

trp
trp

பொதுவாக திரைப்படங்களைப் பார்க்கும் மக்கள் கூட்டங்களை விட சீரியலை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகம் தான் ஏனென்றால் திரைப்படத்தை அந்த நேரத்தில் தான் பார்க்க முடியும் ஆனால் சீரியலை வேலை அனைத்தும் முடிந்த பிறகு ஓய்வாக உட்கார்ந்து பார்க்கும் வகையில் மாலை 6 மணிக்கு மேல் ஒளிபரப்புகிறார்கள் அதனால் குடும்பத்து இல்லத்தரசிகள் அனைவரும் பார்க்க ஏதுவாக இருந்து வருகிறது.

அதிலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து சீரியலை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாய் கொண்டே போகிறது அதிலும் சமீபகாலமாக புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் புதுப்புது சீரியல்களும் வந்து கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அது மட்டும் இல்லாமல் நீண்ட காலமாக டிஆர்பி யில் முதலிடம் பிடித்து வருகிறது. மேலும் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி யில் இடம் பிடித்து வருகிறார்கள்.

அதிலும் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பழைய தொடர்கள் முடிவுக்கு வந்த நிலையில் புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் டிஆர்பி யில் எந்தெந்த சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம்.

முதலிடத்தில் கயல் சீரியல் 10.08 என்ற ரேட்டிங் பெற்றுள்ளது இரண்டாவது இடத்தில் இனியா 8.95 ரேட்டிங் பெற்றுள்ளது மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல 8.88 உள்ளது நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் 8.80 ஐந்தாவது இடத்தில் சுந்தரி 8.5 மிஸ்டர் மனைவி 8. 27 பாக்கியலட்சுமி 7.64 பாண்டியன் ஸ்டோர் 6.90 ஆனந்த ராகம் 6.09 சிறகடிக்க ஆசை 6.02 என முதல் 10 இடத்தில் இதனை சீரியல்கள் இருக்கின்றன.

சமீப காலமாக முதலிடம் பிடித்து வந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தற்போது டிஆர்பி யில் பின்வாங்கி வருகிறது. அதிலும் சமீப காலமாக சன் தொலைக்காட்சி தொடர்கள் கெத்தாக டாப் 10 இடங்களில் அதிக ரேட்டிங் பெற்றுள்ளது.