நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் 3 சீசன் முடிவுக்கு வர இருக்கிறது இந்த நிலையில் இந்த வாரம் பினாலே மூலம் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்கிறார்.
அதேபோல் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன், ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் வெளியேற இருக்கிறார், இதற்கான இறுதிகட்ட சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி அதிகபடியான ஓட்டுக்கள் பெற்று கவின் முதலிடத்திலும் சேரன் இரண்டாம் இடத்திலும் லாஸ்லியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறார், ஆனால் ஷெரின் குறைவான ஓட்டுகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.
அதனால் ஓட்டு வித்தியாசத்தில் ஷெரின் தான் வெளியேற இருக்கிறார் என தெரிகிறது, அதேபோல் பினாலே டாஸ்க்கில் ஷெரின் நன்றாகவே கவனத்தை செலுத்தி நல்ல பாய்ன்ட்டுகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
