இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT இல் வெளியாகும் திரைப்படங்கள்.!

this week released movie : இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

கண்ணகி : கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அறிமுக இயக்குனர் யஷ்வந்த்  கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கண்ணகி இந்த திரைப்படத்தில் ஷாலினி ஜோயோ, அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மயில்சாமி, வெற்றி, ஆதேஷ், சுதாகர், மௌனிகா யஸ்வந்த் கிஷோர், ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் 15ஆம் தேதி திரையரங்கிற்கு வருகிறது.

ஆலம்பனா  : வைபவ் நாயகனாக நடித்துள்ள ஆலம்பனா  திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்கிற்கு வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் வைபாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார்  கே. விஜய் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஃபைட் கிளப்  : உறியடி விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் தான் பைட் கிளப்  இந்த திரைப்படத்தை அப்பாஸ் ரகுமத் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் வருகின்ற 15ஆம் தேதி தான் இந்த திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

தீதும் சூதும் எந்தன் முகவரி : ஜித்தன் மோகன் இயக்கத்தில் ஸ்ரீ குமார் ஜெய், அங்கன ஆர்யா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தீதும் சூதும் எந்தன் முகவரி இந்த திரைப்படம் நாளை 15ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த குசா முனுசாமி வீரப்பன் என்கின்ற புதிய ஆவணப்படம் ஜீ தமிழ் OTT இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது தி க்ரௌன் சீசன் 6  பாகம் 2 டிசம்பர் 14 netflix மற்றும் ரீச்சர் சீசன் 2 அமேசான் பிரைமிலும் வெளியாகிறது.