வருடத்தின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். புது வருடத்தை வரவேற்பதற்கு எல்லோரும் தயார் நிலையில் இருக்கின்றனர். அதே சமயம் இந்த வருடம் நடந்த பல விஷயங்களை நினைவுப்படுத்திக் கொள்பவர்களும் உண்டு.
அதில் திரையுலையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதேபோல் பல படங்கள் எதிர்பார்க்காத வெற்றியடைந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்து அதிர்ச்சியையும் கொடுத்திருக்கின்றது.
இருந்தாலும் வருட இறுதி வரை பாக்ஸ் ஆபிஸ் களத்தில் முத்திரை பதிக்க படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி தியேட்டர் ரிலீஸ் ஒரு பக்கம் இருக்க ஓடிடி பக்கமும் பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் எந்தெந்த படங்கள் வெளியாகிறது என பார்ப்போம். அதில் நாளை அதாவது டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை அன்று பல படங்கள் வெளியாகிறது.
அந்த வகையில் பார்வதி நடித்திருக்கும் உன் பார்வையில் படம் நேரடியாக வரும் வெள்ளிக்கிழமை அன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. விறுவிறுப்பும் திரில்லரும் கலந்த இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை அடுத்து காதல் நகைச்சுவை படமான பிரேமண்டே தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அடுத்ததாக மம்முட்டி நடிப்பில் வெளிவந்த டாமினிக் அந்த லேடீஸ் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் மலையாள படம் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து கார்ப்பரேட் அட்டூழியங்களை பற்றி சொல்லும் பார்மா வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அதே ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் அம்மா பிள்ளை உறவைப் பற்றி சொல்லும் மிஸஸ் தேஷ் பாண்டே படமும் நாளை வெளியாகிறது. இப்படியாக இந்த வாரம் பல வெரைட்டியான படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.